நேற்று வெள்ளிக்கிழமை 15ம் திகதி கனடாவின் ரொறன்ரோ மாநகரில் அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுகள் மற்றும் பத்திரிகைத்துறை ஆசிரியர் ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கழகத்தின் தலைவர் திரு தோமஸ் சாரஸ் அவர்கள் தனது குழுவினருடன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
இவ்வருடத்தின் சமூகசேவையாளரம்களுக்கான விருதுகளைப் பெற்ற ‘கனடா உதயன்’ நண்பர்களாம், தொழிலதிபர் திரு தேவதாஸ் சண்முகலிங்கம் (தாஸ்)மற்றும் மொன்றியால் எழுத்தாளர் வீணைமைந்தன் சண்முகராஜா ஆகியோரை அங்கு கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்நதனர்.
குறிப்பாக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் ‘உலகத் தமிழர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கமல;வாசன் ஆகியோர் சகிதம் அங்கு கூடியிருந்த பத்திரிகைத்துறை மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சித்துறை நண்பர்கள் அனைவரும் விருதுகளைப் பெற்ற இரு வெற்றியாளர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
பிரதம விருந்தினராக அங்கு வருகை தந்திருந்த ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களும் அங்கு வந்திருந்த தமிழ் பேசும் பத்திரிகையாளர்களையும் சமூகத் தலைவர்களையும் பாராட்டினார். மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சருமான விஜே தணிகாசலம் அவர்களும் அங்கு வருகை தநதிருந்தார்.
அங்கு வருகை தந்திருந்த தமிழ் பேசும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உபு தலைவர்களில் ஒருவருமான லோகேந்திரலிங்கம் நன்றி தெரிவித்தார்.
படங்களுக்கு நன்றி ஜிரிஏ ஊடகம் கெங்கா அவர்களுக்கு