வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி நிர்வாக தலைவர் தலமையில் இடம்பெற்றது.
இதில் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அதிபர், கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க தலைவர், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.