– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்பாலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்ததா வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் – “வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில், மாற்றுத்திட்டமொன்றை வகுத்து புதிய வீட்டுத்திட்டத்துடன் பாதுகாப்பான இடத்தில் காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த பாதிப்பு குறைவடைந்த பின்னர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு செல்ல முடியும்” எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மழை வெள்ளத்தை முகாமைத்தவம் சரியாக இல்லாமையால் வருடாவருடம் பெரும் அழிவுகள் ஏற்பட்டு வருவதாக விவசாய மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு துறைசார் நிபுணர்களின் கவலையீனத்தால் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பதில் தாமதமேற்பட்டிருந்ததாகவும் அதன்பின்னர் நிலைமையை புரிந்துகொண்ட அதிகாரிகள் அவசர அவசரமாக வான் கதவுகளை திறந்துவிட்டமையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் இவ்வருடம் அவ்வாறான ஒரு நிலை இல்லாதுவிட்டாலும் பெரு வெள்ளத்தால் மக்கள் பாதிப்புற்றுள்ளனர்.
எனவே எதிர்பாலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்ததா வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிளிநொச்சியில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 28 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்து,
இந்நிலையில் கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப பாடசாலையில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.