கனடாவில் ரொறன்ரோ மாநகரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு விற்பனைத்துறையில் நன்கு அறிமுகமான ROYAL LEPAGE IGNITE வீடு விற்பனைத்துறை நிறுவனத்தின் வருடாந்த நத்தார் தினக் கொண்டாட்டமும் விற்பனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழாவும் கடந்த சனிக்கிழமையன்று Scarborough Convention Centre விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைவர் சுகன் சிவராஜா தனது பணியாளர்கள் மற்றும் சகோதரர்கள் சகிதம் சிறப்பாகச் செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும் வெற்றிபெற்ற விற்பனையாளர்களுக்கு விருதுகளை வழங்கியும் கௌரவித்தார்.
நூற்றுக்கணக்கான வீடு விற்பனையாளர்கள் சிறந்த விற்பனையாளர்களுக்கான விருதுகளைப் பெற்றனர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
படங்கள்- ரவி அச்சுதன் மற்றும் ரகுமாறன்- நன்றி அவர்கள் இருவருக்கும்……………