புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் அதே பிரதேசத்தை சேர்ந்த கபிரியேல் பிள்ளை ராசன் என்பவர் ஆழிப்பேரலையில் உயிரிழந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளினதும் நினைவாக குறித்தவளைவை அமைப்பதற்கு உதவி புரிந்துள்ளார்.
இன்று காலை பாடசாலை அதிபர் தலமையில் ஆரம்பமான நிகழ்வில் அருட்தந்தை அமல்ராஜ்,முள்ளியான் கிராம சேவகர் கி.சுபகுமார் வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறி ராமச்சந்திரன் ,சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நுழைவாயிலை நாடா வெட்டி கபிரியேல்பிள்ளை ராசன் அவர்களின் தாயார் திறந்துவைத்ததோடு தாயாருக்கு பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்