(கனகராசா சரவணன்))
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியலை முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புக்கள் இன்று ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என கோருகின்றனர் எனவே தமிழ் மக்கள் சிங்கள தரப்பிற்கு இனிமேலும் வாக்களித்து ஏமாறக்கூடாது என்பதுடன் தமிழ் மக்கள் ஒற்றுமையாக உலகிற்கும் சிங்கள தேசத்துக்கும் காட்டவேண்டியதாயின் இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதுதான் ஒரே ஒரு தெரிவு என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் 27-12-2023 அன்று புதன்கிழமை இடம்பெற்று உடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டு;ம் என்ற ஒரு சில தரப்பு பெயர்களை முன்மொழிந்துள்ளனர் இந்த பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு ஒரு சிங்கள தரப்பு இதில் மாற்றுகருத்து இல்லை
அந்த சிங்கள தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல், பாதுகாப்பு சம்மந்தப்பட் விடையங்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்கள் அரசியல்கைதிகள் நிலைமை காணிகளை பறிக்கின்ற நிலமை உட்பட தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்கள மயப்படுத்துகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்தும் சம்பந்தமாக அந்த சிங்கள தரப்பால் நிறுத்தப்படுகின்ற அனைத்து தரப்புக்களும் தமிழ் மக்கள் பக்கம் இருந்தது கிடையாது.
தீர்வு சம்பந்தப்பட்ட விடையத்தில் முழு பெயரும் ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலைபபாட்டில் தொடர்ச்சியாக இருக்கினறனர். வெளிப்படையாக 13 வலியுறுத்துவதாகவும் அல்லது ஒற்றையாட்சிக்குள் மட்டும் தான் தீர்வு அல்லது இருக்கின்ற 13 திருத்தத்தில் சிலதை கழித்து செல்லுகின்ற விடையமாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் இந்த தரப்பிற்கு போக முடியாது என்ற முடிவில் தமிழ் மக்கள் இருக்கின்றனரா? மிகத் தெளிவு சிங்கள தரப்பிற்கு இனிமேலும் நாங்கள் வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்ற செய்தியை இந்த தேர்தலில் ஆவது தமிழ் மக்கள் உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் முதல் வட்டத்தில் சிங்கள வேட்பாளர் வெல்லமுடியாத வாய்ப்பு இல்லாமல் போகும் இரண்டாது சுற்றில் தான் வேட்பாளர் தெரிவு செய்யலாம் அப்படிப்பட்ட சூழலில் அவர்கள் பேரம் பேச முன்வருவார்கள் அப்போது பேரம் பேசி ஒரு தரப்பை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டடை எடுக்கலாம்.
ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கும் இந்த தமிழ் தரப்புக்கள் யார்? 35 வருடத்துக்கு மேலாக தோற்றுப்போன ஒற்றையாட்சிக்குள் இருக்க கூடிய 13 திருத்தத்தை வலியுறுத்துபவர்கள் வேறு எதைப்பற்றி கதைக்க தயாரில்லை இன்றைக்கு கூட பேரம் பேசக் கூடிய சூழல் இருக்கின்றனர்.
இலங்கை அரசு பணத்துக்கு புலம் பெயர் மக்களிடம் கெஞ்ச வேண்டியுள்ளது அப்படிப்பட்ட சூழலில் 13 திருத்தத்தை வலியுறுத்தி பேச்சுவார்தையில் ரணில் விக்கிரம சிங்கவுடன் நடாத்தினர். இந்த தரப்பா தமிழ் மக்களுக்கு இந்த வேட்பாளர்கள் உண்மையில் நேர்மையாக இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இறுதி தீர்வு பற்றி பேசப்பேகின்றனரா?
கோருகின்ற தரப்பு பிழையான தரப்பு தமிழ் அரசியலை 13 முடக்குகின்ற திணிக்கின்ற ஒரு தமிழ் தரப்பு அதேவேளை பேரம் பேசி ஆதரிக்கப் போகினற தரப்பு முற்று முழுதாக தமிழர்களின் இனஅழிப்பை இன்றும் நியாயப்படுத்தி அதற்கு துணைபோகின்ற தரப்பாகத்தான் இருக்கின்றது
தமிழ் தேசிய முன்னணி 2009 ம் ஆண்டில் இருந்து பகிகரிப்பு என்ற விடையத்தை ஒவ்வொரு முறையும் அதன் ஊடாக உலகத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் சொல்லகூடிய ஒரு தெளிவான செய்தியை வலியுறுத்தியும் வந்தோம் துரஷ;டவசமாக நாங்கள் சொல்லும் அந்த கருத்தின் ஆழத்தை மக்கள் விளங்கி கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் போலியான கதைகளுக்கு விலை போய் இன்று ஏமாற்றப்பட்டு கடைசியில் மூக்கு உடைபட்டு முகம் குப்பற விழுந்ததுதான் மிச்சம்
ஒவ்வொரு தரப்பும் எமது வயிற்றில் அடித்தனர் இனியாவது எல்லா தரப்பினரும் ஏமாற்றப்பட்டு இந்த முறையும் யாரையும் நம்பி வாக்களிக்கப் போவேமாக இருந்தால் ஏமாற்றப்படுவது இரண்டாது வட்டமாக இருக்கப் போகின்றது இது தான் எங்கள் முடிவா?
நிறுத்தும் வேட்பாளர் யார். அப்படிப்பட்ட வேட்பாளரை நிறுத்துவதாக இருந்தால் இன்று அரசியல் அரங்கில் தமிழ் மக்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஏமாற்றிய தலைவர்களாகதான் இருக்கின்றனர்
சி.வி.விக்கினேஸ்வரன் 3 மாதத்திற்கு முன்னர் ரணிலை ஆதரிக்கவேண்டும் என்ற அவர் தற்போது வேட்பாளராக வருவதற்காக ரணில் ஏமாற்றிவிட்டதாக தெரிக்கும் அவர் நாளைக்கும் நிலைப்பாட்டை மாற்ற தயங்கப் போவதில்லை 2016 ஒற்றையாட்சிக்குள் தமிழ் தேசிய அரசியலை முடக்கப்போவதாக தெரிவித்த விக்கினேஸ்வரன் தமிழ்; மக்கள் பேரவையை உருவாக்கியவர்
இப்படிப்பட்ட வேட்பாளர்கள் ஆகவே நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் இன்றைக்கு தமிழ் மக்களால் நம்பக்கூடிய வேட்பாளராக இல்லை நிராகரிக்கப்படுகின்ற மக்கள் ஏற்றுக் கொள்ளாத வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக அந்த தெளிவான செய்தியை குழப்புவதற்கு இந்த வேலைத்திட்டம் நடக்கின்றது
மக்களுடைய தேவை உணர்ந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என்ற தேவை கிடையாது தேவை எங்கு உள்ளது என்றால் தமிழ் மக்கள் தெளிவாக சரியான தரப்புக்கு பின்னால் ஒன்றிணைய வேண்டும் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 15 வருடங்கனுக்கு மேலாக யார் சரி யார் நேர்மை யார் இல்லை படிப்பதற்கு இந்த தரப்புக்கள் புதிதாக உருவாகும் தரப்புக்கள் இல்லை 15 வருடமாக இருந்த அதே தரப்புக்கள்தான்.
அன்று தொடக்கம் இன்று வரை யார் ஒரே நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கின்றனர் அல்லது ஒவ்வோரு தேர்தலில் புதுக்கதை தெரிவித்து ஏமாற்றி கடைசியில் ஏமாற்றிவிட்டார்கள் என மக்களிடம் சொல்லுகின்ற தலைவர்களை நம்ப போகின்றீர்களா என்பது கேள்வி? தமிழ் தேசிய மக்கள் முன்னணி உண்மையை சொல்லி உண்மையை விளங்கி கொண்டுள்ள கட்சி
இந்த கேள்விக்கு மக்கள் தீர்க்கமான முடிவு எடுத்தே ஆகவேண்டும் ஒற்றையாட்சி இருக்க கூடிய 13 திருத்தத்தையும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பையும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரிக்கின்ற தரப்பையும் ஒன்றிணையுமாறு கேட்கமுடியாது அது சாத்தியமே இல்லை மக்கள் முடிவு எடுக்கவேண்டும் தமிழ் தேசத்தின் இருப்பை ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற அரசியல் அமைப்பை வைத்துக் கெண்டு தமிழ் மக்கள் ஒரு தீர்வை எட்டலாமா இல்லையா என முடிவு எடுக்கவேண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அது நடக்கவே நடக்கது ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட போவதில்லை நாங்களாகவே ஒற்றையாட்சிக்கு இனங்ககின்றோம் என்றால் எங்களுடைய தேசத்துக்கு அழிவு;கு இணங்குகின்றோம் என்பதாகும்