(மன்னார் நிருபர்)
(28-12-2023)
மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த ராணுவத்தின் நத்தார் கரோல் நிகழ்வு நேற்று புதன்கிழமை(27) இரவு 7 மணியளவில் மன்னார் தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் பிரமாண்டமான இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நானயக்கார,மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் உற்பட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிறிஸ்து பிறப்பை யொட்டி இராணுவத்தின் இசைக்குழுவின் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டது.மேலும் மன்னார் மாணவர்களின் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டது.
கரோல் கீதங்கள் இசைத்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராணுவத்தினால் வான வேடிக்கை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.