ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி கோரிக்கை
“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தது மற்றுமின்றி, கொடூரமாக சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , நிரந்தர மௌனமாக்கல் போன்றவற்றின் தடயங்களை விட்டுச்சென்றவர். காணாமல் போனவர்களுக்கான இடைவிடாத தேடுதல், அடிக்கடி பாரிய புதைகுழிகள் வெளிப்படுத்துவது என தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. ராஜபக்சேக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கைகளில் உள்ள இரத்தக்கறைகள் அழிக்க முடியாதவை, மேலும் இந்த போர்க்குற்றவாளிகளுடன் நாம் மேற்கொள்கின்ற எந்தவொரு தொடர்பும் பாதிக்கப்ப்ட்ட எமது மக்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறான கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான சமீபத்திய சந்திப்பு தமிழ் சமூகத்தை ஏமாற்றும் மற்றும் ஆழமாக காயப்படுத்திய ஒரு வேதனையான விடயமாகும் . எனவே. கனடியத் தமிழர் பேரவை (CTC), குளோபல் தமிழ் மன்றம் (GTF) மற்றும் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் பங்குபெற்ற அனைவரும் தமிழ்ச் சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் உறுதியான, தெளிவான மன்னிப்பைக் கோர வேண்டும். இந்த குழுவினர் நடத்திய இந்த சந்திப்பானது இலங்கையில் அதிகாரத்தில் இருந்துகொண்டு போர்க்குற்றங்களுக்கு துணைபோனவர்களிடமும் இன்னும் தமிழர்களுக்கு எதிரான கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு பதிலளிக்காதவர்களிடமிருந்து பொறுப்புக்கூறலைக் கோருகிறது. இது போர்க்குற்றங்களுக்கு எதிரான நீதிக்கான உலகெங்கும் வாழும் தமிழர்களின் போராட்டத்திற்கான துரோகம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.”
இவ்வாறு கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.