– நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார்
((கனகராசா சரவணன்)
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் தமிழ்கள் இனப்பிரச்சனையை கைவிடவேண்டும் என்ற நிலமையை அடைவது தான் இலங்கை அரசின் இன்றைய திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பாலர் பாடசாலை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (28) மாலை இடம்பெற்ற கூட்டுறவு மீனவர் சங்கம் மற்றும் மக்கள் சந்திப்பும் அவர்களுக்கான நிவாரணபொருள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இயக்கத்தால் கூட்டினாலும் பேர் முடிந்த பின்னர் அந்த தலைமைத்துவம் கொள்கையில் இருந்து இந்தியவின் அழுத்தம் காரணமாக தமிழ் தேசம் என்ற கோட்பாட்டை கைவிட்டு ஒற்றையாட்சியான சிங்கள பௌத்த ஆட்சிக்குள் 13 திருத்தத்தை ஏற்றுக் கொள்ளும் திட்டம் வைத்தபோது நாங்கள் வெளியேறி மக்களுக்கு இந்த திட்டம் கடைசிவரைக்கும் கொடுக்கபோவதில்லை என தெரிவித்தோம் அந்த உண்மையைத்தான் நாங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தோம்.
இந்த உண்மையை நாங்கள் சொல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துகொண்டு மக்களை ஏமாற்றி வந்தவர்கள் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடவையாக இந்திய பிரதமர் மோடிக்கு எழுத்து மூலமாக 13 திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக விலியுறுத்தினர் 13 வலியுறுத்தினால் தமிழ் தேச கோட்பாட்டை கைவிடுவதற்கு சமம்.
இந்த ஒற்றையாட்சி சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் தான் அதிகாரத்தை கொடுக்கின்றது இந்த நாட்டில் 75 வீதம் சிங்கள பௌத்தம் என்றபடியால் அந்த ஆட்சியாளர்கள் அந்த சிங்கள பௌத்த மக்களை மட்டும் தான் சிந்திப்பார்கள் நாட்டின் பணத்தை யாருக்கு செலவு செய்வார்கள். முழுக்க தங்களுடைய மக்களாக கருதுகின்ற சிங்கள மக்களுக்குதான் செய்வார்கள்
அதனூடாக கடந்த 75 வருடமாக வடகிழக்கு திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலையுள்ளதுடன் கிடைக்கின்ற நிதியை வடகிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் பயன்படுத்தி இங்கே இருக்கும் தமிழ் பேசும் தன்மை இல்லாமல் செய்து சிங்களமயப்படுத்தும் வேலைகளை செய்து எங்களுடைய தாயகத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழர்களை இல்லாமல் செய்து ஒரு சிறுபான்மையாக்குகின்ற நிலமை தான் இனப்பிரச்சனை ஆரம்பித்தது.
இன்று பொருளாதார ரீதியில் படுமோசமாக இருக்கும் அரசு அன்று புலம் பெயர் மக்களை எதிரியாக பார்தவர்கள் இன்று அதே புலம்பெயர் மக்களிடம் உங்கள் பணத்தை முதலீடு செய்யயுமாறு கொஞ்சுகின்றனர். அரசு இன்று பலவீனமான நிலையில் இருக்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இந்த அரசுடன் பேரம் பேசவேண்டும்.
பாதுகாப்பிற்கு ஒதுக்குகின்ற 15 வீதத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஓதுக்குவதாக இருந்தால் தமிழர்கள் குழம்பக் கூடாது தமிழருக்கு இனப்பிரச்சனை இருக்கு என்ற மனோநிலை இருக்கும் வரைக்கும் தமிழர் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரைக்கும் போராடுவான் என்ற ஒரு பயம் இருப்பதால் தான் பேர் முடிந்து 15 வருடத்தின் பினர் பாதுகாப்பிற்கு இவ்வளவு நிதி ஒதுக்குகின்றனர்.
ஏதே ஒருவகையில் இனப்பிரச்சனை இல்லாமல் செய்ய வேண்டும் இதற்கு இரண்டுவழி மாத்திரம் உண்டு தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை கைவிட்டு முழுக்க சிங்கள பௌத்தர்களுக்கான நாடு தமிழ் முஸ்லீம்களுக்கு இந்த மண் இல்லை சிங்களவர்களுடைய தயவில் வாழுகின்ற ஒரு இனம் என நாங்களாக விரும்பி ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனை இல்லாமல் போகும்
அல்லது இது தமிழ் பேசும் மக்களுக்கு உரிய இடம் அவர்களின் உரிமையை நாங்கள் அங்கீகரித்து ஆகவேண்டும் தெற்கு எப்படி எங்கயுடையதே அதேபோல வடகிழக்கு அவர்களுடையது என சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலமை உருவாகினால் மோதல் இல்லாமல் போகும்
ஆனால் இந்த இரண்டாவதை அடைவதாக இருந்தால் இன்று மட்டும் தான் அதைப்பற்றி கதைக்க முடியும். ஏன் என்றால் சிங்கள தேசம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத மிக பலவீனமான நிலையில் இருக்கின்றனர் இந்த நிலையில் உரிமை சாந்த விடையத்தை கேட்காமல் எப்போ கேட்கப் போகின்றனர்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சியாக இருக்கலாம் அரசு தரப்பை விட்டு பிள்ளையான்; டக்கிளஸ்; தமிழ் மக்களின் இருப்பை பற்றி பேசப் போவதில்லை பிள்ளையானின் நிலைப்பாடு முஸ்லீம்களை ஏதிர்ப்பதாக காட்டிக் கொண்டு முஸ்லீம் தலைவர்கள் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக எல்லாவற்றையம் பறித்து போகின்றனர் வடக்கை விட கிழக்கு முற்றிலும் வேறு இங்கு தமிழ் முஸ்லீம் பிரச்சனை அதிகம் நாங்கள் முஸ்லீம்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் வடகிழக்கு இணைப்பு கூடாது என கருத்தை முன்வைத்து முழுக்க முழுக்க தழிழர்களை முஸ்லீம்களுக்கு எதிராக திருப்பும் அரசியல் செய்கின்றார்.
அதேவேளை முஸ்லீம் தலைவர்கள் வடகிழக்கு இiணைப்பு வேண்டாம் என கேட்கின்றனர் எனவே அதில் எப்படி பிள்ளையானும் முஸ்லீம் தலைவர்களும் அதில் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
முஸ்லீம் தலைவர்கள் தமிழர்களின் போரட்டதுடன் இருக்கவில்லை அரசு பக்கம் இருந்தனர் ஆனால் முஸ்லீம் மக்கள் கனிசமானளவு உரிமை போராட்டத்தில் இருந்ததுடன் வீரச்சாவடந்துள்ளனர் 2009 தமிழர் போராட்டம் மௌனிக்க வைக்கப்பட்ட அடுத்த நிமிடம் முஸ்லீம் மக்கள் சிங்கள தேசத்தால் குறி வைக்கப்பட்டனர்.
நாங்கள் வடக்கு கிழக்கில் இணைப்பு கேட்கின்ற போது முஸ்லீம்களுக்கு கிழக்கில்; தனித்துவம் பாதுகாக்காமல் உறுதிபடுத்துமாறு நாங்கள் கேட்கிவில்லை தெற்கில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு பாதுகாப்பா இருக்கின்றனரே வடகிழக்கில் இருக்கின்ற சிங்கள மக்களை பாதுகாப்போம் நாங்கள் இனவாதிகள் இல்லை அதற்காக எங்கள் உரிமையை மறுக்க சொல்வது நியாயமில்லை.
தேவானந்த ஒரு நாளும் பிரச்சனையை தீர்க்க வரப்போவதில்லை அவர் தனது இருப்புக்காக ஒரு ஒட்டுக்குழுவாகவந்து சிறிலங்க இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலைக்காக வந்தவர் கூலிக்கு வேலை செய்கின்ற நபர் சிங்கள அரசு தான் தமிழ் விரோத செயற்பாடுகளை நேரடியாக செயற்படாமல் தமிழரை கொண்டு செயற்படுத்துவதற்காக டக்ளஸ் பிள்ளையான் இருக்கின்றனர் இது தான் உண்மை
அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கில் தனி பெரும் கட்சியாக வளருவோம் அதை எவரும் தடுக்க முடியாது தேசியத்துக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஏதே தமிழர் நலனுக்காக பிள்ளையானுக்கு வாக்களித்திருத்திருந்தால் அவர்கள் இந்த பிரச்சனை தீர்த்திருக்க வேண்டும் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை எங்கள் இனத்துக்கு சாபக்கேடாக இருக்கின்ற 13 திருத்தத்தை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் உறுப்பினர்கள் 18 பேரில் 16 பேர் வலியுறுதி வருகின்றனர்.
எங்களுக்கு உயிர்தியாகம் செய்ய ஒரு இயக்கம் இல்லை உயிர்தியாகம் செய்யும் தரப்பு உங்களுக்கு பொய் சொல்லமாட்டார்கள் அவர்களை கண்ணமூடிக் கொண்டு நம்பவாம் அந்த சூழல் இல்லா நிலையில் நீங்கள் ஆய்வு செய்யவேண்டும் இந்த ஆழமான அரசியலை விளங்கி கொண்டு சரியான முடிவை நீங்களாகவே எடுக்கவேண்டும் எவரும் எது சரி எது பிழை என சுட்டிக்காட்ட போவதில்லை உங்களுக்கு அந்த அறிவு இல்லாவிடில் தொடர்ந்து ஏமாற்றப்படுவீர்கள் எங்களுடைய பெறுப்பு அந்த அறிவை கொடுப்பதுதான் மற்றவர்கள் தங்கள் நியாயத்தை சொல்லிக் கொண்டுவருபார்கள் இரண்டில் எது சரி எது பிழை என்றதை தராசில் கணக்கிட்டு முடிவெடுக்க கூடிய அந்த அறிவு உங்களிடம் இருக்கவேண்டும் எhன்பது தான் எங்களுடை நோக்கம் என்றார்.