பிள்ளையார் ஆலயத்தில் தேவாரம் ஓதிக் கொண்டிருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுக்காலை நடந்துள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.இராசரத்தினம் (வயது-88) என்பவரே உயிரிழந்தவராவார்.
ஆலயத்துக்குத் தினமும் சென்று தேவா ரம் ஓதும் இவர், நேற்றும் வழமை போன்று ஆலயத்துக்குச்சென்றுள்ளார். ஒலிவாங்கியில் தேவாரம் ஓதிக்கொண்டி ருந்தபோது திடீரென அவர் மயங்கிச் சரிந்துள்ளார்.
உடனடியாக வல்வெட்டித் துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர் கள் உறுதிப்படுத்தினர்.