கண்ணில்லாக் காலனவன் கவர்ந்து சென்ற எங்களின் சந்தியா!
கனவா நனவா கண்ணில்லாக் காலனவன் கவர்ந்து சென்றுவிட்டானா உன் உயிரை? நம்பமறுக்கிறது நம் நெஞ்சம். கடந்த வியாழன் அன்று எம்மிடம் விடைபெற்று எத்தனை மகிழ்வாய் ஏகினாய் யமேக்கா. எவர் கண்பட்டதுவோ என்ன நேய் வந்ததே இன்றுநீ எங்களோடு இல்லை. கண்ணீர் விட்டுக் கதறியழுகின்றோம். வானொலிக்கு வந்து நீ வழங்குகின்ற “சண்டே மசாலா” நிகழ்ச்சி கேட்க காத்திருக்கும் நேயர்கூட்டம் கண்ணீர் விட்டழுதே கலங்கி நிற்கிற ஆற முடியவில்ல அழுதும் தான் தீரவில்லை தேடி உன்னைத் தினமும்தான் அலைகின்றோம்.
நீண்ட காலம் நீ வானொலியில் நீ வாசம் செய்திருந்தாலும் எங்கள் யுகம் வானொலில் வந்து இணைந்து ஆண்டுகள் நான்குதான் ஆனாலும் நாற்பதாண்டு நட்புடன் எங்கள் நேயர்களின் நெஞ்சங்களில் நிலையான இடம்பிடித்தாய் உந்தன் கலகலப்பான பேச்சும் கணீர் என்ற குரல் வளமும் கொண்டு எங்களை ஆட்கொண்ட அன்பின் திருவுருவே ஆனந்தத்தின் உறைவிட மே திரும்புகின்ற இடமெங்கும் உந்தன் திருமுகமே தெரியுதம்மா எப்போது வருவாய் என்று எண்ணி மனம் துடிக்கும். மீண்டும் ஒரு முறை காற்றலையில் உந்தன் குரல் காந்தமென எம்மைக் கவர்ந்திலுக்க மாட்டாதா?
ஏங்கும் இதயங்களுடன் யுகம் வானொலி, அனைத்துலக
தமிழ் வானொலி கலைஞர்களும், நேயர்களும்…
துயர் பகிர்வு
திரு.திருமதி கிட்ணசாமி நாகலட்சுமி
அவர்களின் அன்பு புதல்வி
திருமதி சந்தியா கிட்ணசாமி
பிள்ளைகள்
ஹறிஷ் மனோகரன்
தினேஷ் மனோகரன்
லக்ஷ்மி பிரான்சிஷ்
பிறிதுவிஷ் கான்சிஷ்டஷ்
சித்றாங்கி புறோகித்
வைஷ்னவி கிட்னசாமி
ஜிலாஸ் பிரான்சிஸ் (மருமகன் )
பேரப்பிள்ளைகள்
லியம் பிரான்சிஷ்
செயின் பிரான்சிஷ்
யாறா றோகித்
லொறென்சோ மனோகரன் லின்ச்
மீறா பிறான்சிஷ்
லயிலா புறோகித்
செற்று புரோகித் (மருமகன் )
MEMORIAL SERVICE
Visitation
Sunday December. 31,2023
01:00PM – 03.00 PM
Funeral service
Sunday December. 31.2023
03.00PM 5:00PM
Ajax Crematorium & Visitation Centre
384Finley Ave, Ajax, Ont, LIS 213
Contact Ph: Chithra 647-382 0305