மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சிசிடிவி கமெரா, 17 ஆயிரம் ரூபா காசு மற்றும் கணினி என்பன களவாடப்பட்டுள்ளன.
இன்றையதினம் பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் காசு என்பன களவாடப்பட்டதை அவதானித்தனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.