யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களுக்கான அகரம் நிறுவனத்தின் “பொங்குவோம் பொங்கவைப்போம்” எனும் தொனிப்பொருளில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மதியம் 12.00 மணியளவில் அகரம் உதவும் கரங்கள் தலைவர் ஜே.மதியழகன் தலமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.ரேவதி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பா.நிர்மலன், சமூக சேவை உத்தியோகத்தர் ப.பரதன், பிரதம முகாமைத்துவ உத்தியோகர் பி.சுதாகினி, மதகுருவான யோக சம்பந்தக் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பொங்கல் பொருட்களை வழங்கிவைத்தனர்.