தாயகத்தில் மூன்று சிறார்களின் உயிர் காத்த கனடா கந்தசாமி ஆலய பக்தர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார் ‘நிவாரணம்’ அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் அவர்கள்.
அவர் தனது செய்திக்குறிப்பில் பின்வருமாறு எழுதுகின்றார்:-
உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
கடந்த நவம்பர் மாதம் எனக்கு மட்டக்களப்பு மருத்துவமனையில் உள்ள சிறார்களின் இதய நோய் நிபுணர் வைத்தியகலாநிதி கார்த்திக்கிடம் இருந்து ஒரு அவசர கோரிக்கை வந்தது. அதில் TOF என்னும் கடும் இருதய வருத்தத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பல குழந்தைகள், சிறார்களின் விவரங்கள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு ஒழுங்கு செய்யதல் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். இதே போல் கொழும்புவிலுள்ள ஒரு சிறுமியின் கோரிக்கையும் வந்திருந்தது.
உடன், என் செயற்பாட்டாளரை அவர்கள் இல்லங்களுக்கு அனுப்பி, அவர்களின் மேலதிக விவரங்கள் எடுக்கப்பட்டு, சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்கினேன். இதனிடையே யாழ்ப்பாண மருத்துவமனையின் இதய சத்திர சிகிச்சை பிரிவின் மருத்துவர்களிடமிருந்து தங்களுக்கு அவசியம் தேவைப்படும் TOE என்ற உபகாரணத்தினை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தரும்படி எனக்கு கோரிக்கை வந்திருந்தது. அதன் விலையே சுமார் $80000 கனடிய டொலர்களாகும். இந்த உபகரணத்தை அவர்களுக்கு தருவித்து கொடுப்பதன் ஊடாக, கடுமையான இருதய வால்வு சிகிச்சைகளை (பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு) யாழ்பாணத்திலேயே செய்து முடிக்கலாம். சிறார்களுக்கு தற்சமயம் யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிசை நிபுணர்கள் இல்லாதபடியினால், கொழும்பில் தான் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உள்ளது என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த TOE உபகரணம் வாங்குவதற்கும், சிறார்களின் சத்திர சிகிச்சைகளுக்கான நிதி தேவைக்கும் MGR 107 இசை நிகழ்வினை ஒழுங்கு செய்ய தொடங்கினேன். இதனிடையே கனடா கந்தசாமி கோவில் நிர்வாக சபையினர், பெறுமனதோடு தங்கள் வளாகத்தினுள் என்னை கந்தசஷ்டி சூரன் போர் நாளிலும், ஜனவரி முதலாம் நாளிலும், பக்தகோடிகளிடமிருந்து நிதியினை பெற அனுமதித்தார்கள். சூரன் போர் – பாரணை நாட்களில், கொடையாளிகள் வரிசையில் வந்து நின்று $13,833.16 நிதியினை வழங்கிட்டார்கள். உடன் இரண்டு சத்திர சிகிச்சைகளை கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையில் ஏற்பாடு செய்தேன்.
Dec 25 ஆம் திகதி, கிறிஸ்துமஸ் நாளன்று கொழும்பை சேர்ந்த 2 வயது 4 மாதமான யாஷ்மிகா ஹரனின் கடினமான இருதய சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது. கிட்டத்தட்ட 13 மணித்தியால அறுவை சிகிச்சையினையும் இந்த பிஞ்சு குழந்தை எதிர்கொண்டது. ஆறு நாட்கள் ICU Ventilator இல் வைத்திருந்து தான் பிள்ளையை மீட்டெடுத்தனர்.
அடுத்ததாக Dec 26 ஆம் நாள், மூதூர் – திருகோணமலையினை சேர்ந்த இரண்டரை வயதான குழந்தை கன்சிகா அஜந்தனின் கடினமான இதய சத்திர சிகிச்சை நலமே நடைபெற்றது. மேலும் ஒரு பிள்ளையின் சிகிச்சைக்கான நிதி தேவைப்பட்டதால் ஜனவரி முதல் நாள் கனடா கந்தசாமி ஆலயத்தில், நானும் தொண்டர்களும் காலத்தில் இறங்கி $6094.15 நிதி சேகரித்தோம். இந்த நிதி நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கையில், Dec 28 ஆம் திகதியே ஆலையடிவேம்பு – அக்கறைப்பற்றை (அம்பாறை மாவட்டம்) சேர்ந்த ஒரு வயதும் 10 மாதமும் ஆன குழந்தை சீனிஜனின் இதய சத்திர சிகிச்சையினை ஒழுங்கு செய்து வெற்றிகரமாக முடித்தோம். இந்த மூன்று மழலைகளும் உயிர் மீண்டு, இரண்டாம் பிறவி எடுத்ததற்கு காரணம், கனடா கந்தசாமி கோவில் நிர்வாகமும், அதன் பக்த கோடிகளும் ஆவர். இரு கரம் கூப்பி அந்த வறிய நோயாளிகளின் பெற்றோர் – குடும்பத்தார் சார்பில் நன்றிகளை கூறி கொள்கின்றோம். இந்த சத்திர சிகிச்சையினை செய்த நிபுணர் வைத்தியகலாநிதி காஞ்சனா சிங்கப்புலி மற்றும் மருத்துவ குழுவினருக்கும், லேடி ரிட்ஜ் மருத்துவ குழுவினருக்கும், சிறப்பு கட்டணங்கள் தந்துதவிய லங்கா மருத்துவமனை நிர்வாகத்திற்கும், என்னுடன் நிதி சேகரிப்பின் ஈடுபட்டு உதவிய அணைத்து தொண்டர்களுக்கும் கோடான கோடி நன்றி. சத்திர சிகிச்சைகளுக்கான தொகை, மற்றும் தானம் தந்தோர் விவரம் ஆகியவற்றினை எனது முகநூலில் பார்வையிடலாம்.
அன்பார்ந்த மக்களுக்கு ஒரு வேண்டுகோள்……… பல இசை நிகழ்வுகளுக்கு ஆதரவு வழுங்கும் நீங்கள், நான் பெரு முயற்சி எடுத்து ஒழுங்கு செய்யும் MGR 107 இசை நிகழ்விற்கும் பெரும் திரளாக வந்து உங்கள் ஆதரவினை தருமாறு அன்புடனும், உரிமையுடனும் கேட்டு கொள்கின்றேன். டொரோண்டோவின் முன்னணி இசை குழுவான LATHAN BROTHERS மற்றும் இசை கலைஞர்கள் – பாடகர்கள், தங்கள் நேரத்தினை இதற்காக தந்துதவுகிறார்கள். Princess Banquet Jeya எங்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மண்டபத்தினை தந்துதவுகிறார். நிகழ்ச்சி அட்டகாசமாக இருக்கும் என்பது உறுதி.
உங்களின் பங்களிப்புடனும், ஆதரவுடனும் மேலும் பல உயிர்கள் காப்பாற்றப்படும். யாழ்ப்பாண மருத்துவமனையின் இதய நோய் பிரிவிற்கு அவசியம் தேவையான TOE இயந்திரத்தினையும் பெற்று கொடுப்போம். வழமை போல் இசை நிகழ்வின் முழு செலவும் என்னுடையது. சேரும் 100 வீதமான நிதியும், மேற்கூறிய தேவைகளுக்கும், பிற மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு, சமூக வலைத்தளங்களில் நிதியறிக்கை சமர்ப்பிக்கப்படும். நீங்கள் நிகழ்விற்க்கு வர இயலாவிட்டாலும் நுழைவு சீட்டினை கீழ்கண்ட நிறுவனங்களில் வாங்கி உங்கள் ஆதரவினை வழங்கலாம்.
மனிதத்தை வளர்ப்போம், அன்பினை பெருக்குவோம்! நன்றி!
செந்தில் குமரன்
416 200 7652
www.நிவாரணம்.com
E – Transfer Detail: info@நிவாரணம்.com
fb : Singer Senthil
MGR 107 Show Date: Friday, Jan 19th, 2024 @ 7pm Venue: Metropolitan Center (Kennedy & Finch)
3840 Finch Ave E, Scarborough
எம்ஜிஆர் 107 இசை நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுக்களை பின்வரும் இடங்களில் வாங்கி எமது நற்பணிக்கு தங்கள் ஆதரவைத் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
Brampton – Abina’s Fashion (905) 459-4900
Etobicoke – Asia Gold (416) 746-3795
Markham – Fashion World (905) 471-2223
Scarborough – Kumar Video (416) 292-9043,
New Spiceland Video (647) 787-4256,
Elamthulir Money Transfer (416) 770-6966
Mississauga – S.K.Fashions (905) 897-0233 &Vithus Video (905) 290-6925