பனிபெய்யும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த
திருமகனாம் குமார் என்னும் அழகனே
காலனவன் கவர்ந்திட்ட நேரமதில்
உன்னை வீழ்த்தும் விதிகள் எழுதப்பட்டிருந்தால்
விதிகளை வீழ்த்தும் அளவிற்கு எங்களின் பலம் போய்விட்டதே
ஞாலமதில் பிறந்திட்ட உன் புகழை நாம்
இவ் நானிலமே பயன் பெறவே நடந்தாயே
கடல் கடந்து நீ சென்று நாம் வாழ வழிவகுத்தாய்
இன்றும், என்றும் உன் நினைவு அழியாது
மனங்களில் நிறைந்தீர் மாசற்ற மனிதராய் உணர்ந்தோம்
மனதை ஈர்ந்தவராய் பாராட்டு பெற்று
பதவி உயர்வுகள் தேடி வந்தன
சினம் கொள்ளல் உம்மிடத்தில் சிறிதளவும் இல்லை
சீரான உடைகள், சிங்கார நடை, சிரித்த முகத்தோடு
செந்நிற மேனி சீக்கிரம் பொருந்திடும்
நட்பு வட்டங்கள் நடுவே சிகரமாய் இருந்தீரே
குதூகலம் நிறைந்து கொண்டாடி மகிழந்தவை இனி வருமோ
ஏங்கி நிற்க்கும் நாம் உன்பாத கமலத்தை பூசித்து வணங்குவோம்
எங்கிருந்தாலும் அனைவரையும் வாழ்த்துவாய் என்று தெரியும்
17-12-2023 அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.
சத்தியசீலன், சத்தியகுமார், சத்தியபவான் மூவரின் நினைவாக 2-1-2024 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் கோவிற்குளம் வவுனியா இல்லத்திலுள்ள குழந்தைகள், சிறுவர்கள். முதியவர்கள் அனைவருக்கும் மூன்றுநேர உணவு வழங்கப்பட்டது.
குடும்பத்தினர். உற்றார், ஊறவினர், நண்பர்கள்