மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றச் செயலாளருமாக லோகன் கணபதி நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்டம்
கனடா ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறுவர்கள், குழந்தைகள் நலன்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமாக லோகன் கணபதி அவர்கள் நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ கொண்டாட்டம் கடந்த 14-01-2024 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் மார்க்க்ம் நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மார்க்கம் நகரத்தின் மேயர் பிராங்க் ஸ்கெப்பட்டி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மாகாண அரசின் உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கலை நிகழ்ச்சிகளும் மற்றும் சிறப்பான உரைகளும் இடம்பெற்றன.. இந்த விழாவில் ‘மலையகம் 200’ என்ற கருப்பொருளிற்கு முக்கியத்துவம் வழங்கப்பெற்று இருவர் சிறப்புரையாற்றினார்கள். மேற்படி உரைகளில் மலையக மக்கள் கடந்த 200 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்ட நாட்களிலிருந்து அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் மற்றும் அவர்களது தேவைகள் இன்னும் கவனிக்கப்படாமல் இருப்பது போன்ற விடயங்கள் தொடர்பான விடயங்கள் அடங்கியிருந்தன.
அன்றை விழாவில் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய அனைத்துக் கலைஞர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.
விழாவை நடத்துவதற்கு லோகன் கணபதி அவர்களின் அலுவலகத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் மற்றும் உதவியாளர்கள் தொண்டர்கள் பக்க பலமாக இருந்தார்கள் என்பதும் திருமதி (டாக்டர்) லோகன் கணபதி அவர்களும் அங்கு வருகை தந்து விழா சிறப்புற நடைபெற ஆலோசனைகளை வழங்கி நின்றார்.