ரஜினிகாந்த்- நெல்சன் கூட்டணியில் உருவாக இருக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் காவாலா பாடல் ஹிட் ஆக, வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், இதற்காக அவர் திரைக்கதை எழுதி வரும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
![ரஜினிகாந்த், அஜித், வடிவேலு - அடுத்த பட பதிவேற்றம்?](https://uthayannews.ca/wp-content/uploads/2023/05/Jailer-padam-Rajinikanth.jpg)