(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி உப தலைவர் என்.நகுலேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (23) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்தார்.
கடந்த வருடம் நவம்பர் 25 ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி காரியாலயத்தில் மாவீரர் பெற்றோரகளை கௌரவிக்கும் நிகழ்வு மேற்கொண்ட நிலையில் பொலிசாரால் கட்சி உப தலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற விளக்கமறியலில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவரை 60 நாளின் பின்னர் பிணையில் விடுவித்தார்.