பு.கஜிந்தன்
இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி இன்றையதினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.