என்.புவியரசன்
இந்திய பௌத்தம் தொடர்பில் இந்தியாவே இலங்கையில் பேசாதபோது சீனா இந்த விடயத்திற்காக யாழ்ப்பாணம் வந்து பேசுவது ஏன் என்ற வினா தற்போது யாழ்ப்பாணத்தில் பல மட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.
இந்திய மற்றும் சீன பெளத்த உருவப்படங்களின் ஒப்பீடு என்ற தலைப்பில் இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் ஆய்வு ஒன்று இடம்பெற்றது.
இதில் சீனாவின் பீஜிங்கில் உள்ள பீகிங் பல்கலைக்கழகத்தின் பௌத்த நூல்கள் மற்றும் ஆராச்சி மையத்தின் வெளிநாட்டு மொழிகள் பள்ளியைச் சேரந்த பேராசிரியர் லெலே ஹாங் கலந்துகொண்டு இந்த ஒப்பீட்டு ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு இந்த ஒப்பீட்டை பேசுவதன் மூலம் எவருக்கு நன்மை?
அண்டை நாடான இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியா நகரில் பால இராமருக்கு இந்திய ரூபா 2000 கோடியில் புதிய நவீன ஆலயம் ஒன்று அமைக்கபட்டு அதில் கற்சிலையாக வடிக்கப்பட்ட பால இராமருக்கு உயிரூட்டும் (பிராண பிரதிஷ்டை) சடங்கு நடைபெற்ற அதே நாளில், இந்தியாவில் பௌத்தம் தொடர்பிலான கருத்தரங்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
அயோத்தியில் இடம்பெற்ற மத நிகழ்வுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முன்னின்று நடத்தினார்.
அதே தினத்திலேயே இலங்கை யாழ்ப்பாணம் பலகலைக்கழகத்தில் பௌத்தம் தொடர்பில் இந்தியாவிற்கும சீனாவிற்கும் இடையில் ஒப்பீடு செய்வதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமா என்ற வினாவிற்கு உடன் விடை தேட முடியாவிட்டாலும் அதனை இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்விற்கு உட்படுத்துவதில் எந்தளவிற்கு நன்மை உள்ளது என்பதை ஆய்வற்கு உட்படுத்த முடியும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது ஓர் நுண்கலை சார்பான ஒப்பீட்டு ஆய்வு என்றாலும், இதில் கணிசமான இஸ்லாமிய மாணவர்களும் பங்குகொண்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
இவற்றின் அடிப்படையில் இந்திய சீன வௌத்தம் தொடர்பான ஒப்பீடு என்பதை அயோத்தி பால இராமர் கோவில் பிரதிஸ்டை ஆகியவற்றின் ஒப்பீடாகவும் சிலர் பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக அயோத்தியில் பால இராமர் கோவில் மதச் சடங்குகள் இடம்பெற்ற அன்று, இந்தியாவிலுள்ள சில பௌத்தர்கள், அயோத்தியில் உள்ள அந்த நிலம் பௌத்தர்களுக்கு சொந்தமானது, அந்த இடத்தில் பௌத்தச் சின்னங்கள் காணப்பட்டன என்றெல்லம் கூறி, அந்நாளை ஒரு கரிநாளாக தாங்கள் அனுசரிப்பதாகவும் அறிவித்திருந்தனர்.
இலங்கையில் இந்தியா போன்று முழுமையாக தீர்மானிக்கௌ ஓர் சக்தியாக வலுப்பெற்று காலூண்ற வேண்டும் என சகல வழிகளிலும் துடிக்கும் சீனா, அரசியல், பொருளாதார, இராஜதந்திர ரீதிகளில் பல முயற்சிகளையெல்லாம் முன்னெடுக்கின்றபோது பல இடங்ளில் தோல்விகளை சத்திப்பதற்கு இந்தியாவே காரண கர்த்தாவாக இருப்பது சீனாவிற்கு நன்கு தெரியும். குறிப்பாக தீவக மின்சார திட்டம், ஆய்வுக் கப்பலின் வருகை, பொருளாதார வலயம் என அப்பட்டியல் நீள்கிறது.
இவற்றின் காரணமாக, இலங்கையில்-அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியல்- சீனா காலூண்றுவதற்கு, இந்திய நலனிற்கு எதிரான அல்லது போட்டியான விடயங்கள் ஊடாக முயலக்கூடாது என கடந்த ஆண்டு சீனாவின் பிரதிநிதிகளைச் சந்தித்த வடக்கைச் சேர்ந்த சிலர் கூறிய ஆலோசணையை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே சீனாவின் முன்னெடுப்பில் இந்த இந்திய சீன பௌத்த ஒப்பீடு ஆய்வரங்கம் இருக்குமானால் இந்தியாவோடு தொடர்புபட்ட விடயங்களை முன்நகர்த்த சீனா நாடிபிடித்துப் பார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
கல்வியின் பெயரால் இலங்கை-சீன நட்புறவு விடயங்கள் அடிப்படையிலான அம்சங்களை முன்நகர்த்தி அதன் ஊடாக சீனாவின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கில் காலூண்றி தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியுமா என சீனா முயற்சிக்கின்றது.
அதேநேரம் இந்ந விடயத்திலும் இந்தியா வழமைபோன்று மௌனம் காத்தாலும் அதுதொடர்பில் ஆராயமல் விட்டுவிடும் என நம்பிவிட முடியாது. ஏனெனில் இந்த கருத்தரங்கு விடயம் ஏற்கனவே இந்தியாவின் காதிற்கும் விடயம் சென்றிருக்கும்.
இந்த நிலையிலேயே சீனா வடக்கில இன்னுமோர் விடயத்தில் கால் வைக்கவுள்ளது. அது முல்லைத்தீவை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடி துறை சார் முதலீட்டு வலயம் ஒன்று ஆரம்பிப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சீன நிறுவனம் ஒன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பகிரங்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கள்ளப்பாடு கிராத்தில் அமையவுள்ள இந்த முதலீட்டு வலயத்திற்காக முதல் கட்டமாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்படி வயலயம் அமையவுள்ளதாக கூறப்படும் கள்ளப்பாட்டில் கடந்த ஆண்டு 19 பேரிற்கு கடல் அட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீன முதலீட்ல் அமையவுள்ள மீன்பிடி முதலீட்டு வலயம் தொடர்பில் இன்றுவரை தமக்கு ஏதும் தெரியாது என மாவட்ட அரச நிர்வாகம் கையை விரிக்கின்றது.
முல்லைத்தீவில் சீனாவின் மீன்பிடி பொருளாதார வலயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த , அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நடைபெற்ற மற்றுமோர் கலந்துரையாடலில், விபத்தில் காலமான நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அன்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் இருந்து இறால் குஞ்சுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை பண்ணைகளில் வளர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களின் செயற்பாடுகளால் உள்ளூர் இறால் குஞ்சு உற்பத்தியாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளதாகவும் , இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இப்படியான பின் புலங்களில் இலங்கையில் மீண்டும் இந்திய சீனாவின் பனிப்போர் குறைவின்றித் தொடர்கின்றது என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களே இந்தியாவின் பிராந்திய நலன்கள் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்புகளுக்கு அரணாக உள்ளன என்று தமிழர் தரப்பு தொடர்பு கூறி வருகிறது.
கல்வி, கருத்தரங்கு, மீனவர்களுக்கு உதவி போன்ற போர்வைகளில் சீனா வடக்கு-கிழக்குப் பகுதிகளில் கால் பதிக்குமாயின் அது தமிழர் தாயகப் பகுதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வியலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று துறைசார் வல்லுநர்கள் கவலை வெளியிடுகின்றனர். தமிழர் பகுதிகளில் சீனா கால் பதிக்கும் பட்சத்தில் அது மறைமுகமாக சிங்களக் குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும், குடிபரம்பலை மாற்றியமைத்து தமிழர்களில் நிலையை மேலும் மோசமாக்கும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை இந்தியா கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. சீனா வடக்கில் கால் பதிக்க அதிதீவிர முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதே மிகப்பெரும் கேள்வி.