இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பின்னர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் இந்த வெற்றி தமிழ் தேசிய உணர்வை பறைசாற்றி உளது. உங்களின் தலைவர் தேர்வு நீங்கள் தமிழ் தேசியம்மீது கொண்ட உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவையையும் உறுதி செய்துள்ளது. தமிழ்த்தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து ஈழத்தமிழர் உரிமைக்காக போராட காலம் உங்களுக்களித்த பொன்னான வாய்ப்பு இதுவாகும். ஈழத்தமிழரின் உரிமைமீட்ப்பில் அனைத்து கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் நாமும் தொடந்தும் தோள்கொடுப்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
முதற் தடவையாக கட்சித் தலைவர் தெரிவில் மக்கள் ஆட்சி முறைத் தேர்வுமூலம் தெரிவு செய்தமை ஜனநாயகம் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தகமையானவர்களுக்குள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படும்போது பலமாக வளைர்ச்சி பெறுவதுடன் சீரான கூட்டுத் தலைமையையும் உருவாக்கும்.
இதேவேளை தலைவர் தேர்வில் போட்டியிட்டு ஜனநாயக முறைமைக்கு வலுசேர்த்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் . எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கும் கௌரவ மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் வழியில் சென்று கட்சியை புத்தெழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் பணி அமையுமென்பதில் எனக்கு அசைக்கவியலாத நம்பிக்கை உண்டு.
தோழமையுடன்,
நிமால் விநாயகமூர்த்தி,
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர், கனடா.