(24-01-2024)
பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குற்றச் செயலுக்கு பயன் படுத்திய ஜீப் ரக வாகனத்தை செலுத்தியவர் என்பதுடன் அந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த குற்றச்செயலை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலையின் சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஹக்மன, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ மற்றும் யக்கல முல்ல ஊடாக காலியை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த படுகொலையை இலங்கையிலிருந்து தலைமை தாங்கியவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.