கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தினர்’ நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த வாரம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஆர்மடேல் சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார உறுப்பினர் யுனைற்றா நாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி தொடர்ந்து மார்க்கம் நகர சபை சார்பான வாழ்த்துப் பத்திரம் ஒன்றையும் வழங்கிச் சென்றார்.
சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கப்பெற்றிருந்த பொன்னையா விவேகானந்தன் அவர்கள் சிறப்பானதும் அழகியதுமான உரையை ஆற்றினார். தமிழ் மக்களது பண்டைய காலத்து பண்பாட்டு முறைகள் மற்றும் எவ்வாறு எமது மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தை செய்து “சூரியனன் வழிபட்டு அதன் பலனை அனுபவித்தார்கள் போன்ற விடயங்களை தெளிவான முறையில் எடுத்துரைத்தார.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் அங்கு உரையாற்றினார்.
சங்கத்தின் பல அங்கத்தவர்கள் பாடல்களைப் பாடியும் நாடகங்;களை நடத்தியும் சபையோரை மகிழ்வித்தனர்.
மேற்படி விழா சிறப்பாக நடைபெறுவதற்கு சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது