நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர்,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன தொடர்ந்து கலை நிகழ்வுகளான நடனம் , நாடகம், பட்டி மன்றம் , சிலம்பாட்டம் , கவிதை, மாணவர்களின் தமிழ்ப் பேச்சு , முதியோர்களின் நிகழ்வுகள் எனப்பல கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன , பங்கு பற்றிய அனைத்து கலைஞர்கட்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. . நிறைவாக நன்றி உரையுடன் கனேடிய, தமிழீழத் தேசியக் கொடிகள் முறைப்படி இறக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
