(கனகராசா சரவணன்ர்)
மட்டக்களப்பில் சிறிலங்காவின் சுதத்ந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் பொலிசரின் பல தடைகளை தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பொதுமக்கள் கறுப்புக் கொடி ஏந்தியவாறு கல்லடி செபஸ்தியான் தேவாவாலயத்தின் முன்னாள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினமான நாளை பெப்பிரவரி தமிழர்களின் கரிநாள் என வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பிரகடனப்படுத்தி கிழக்கில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனா.; இதற்கு வலிந்து காணாமல் போன உறவுகளின் சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு பொலிசார் தடைவித்ததுடன் நா.உறுப்பினர் இருவர் உட்பட 17 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெற்று இரவு இரவாக வீடுவீடாக வழங்கினர். அதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள முகிய சந்திகளில் பொலிசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கல்லடி பாலம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கொழும்பில் இருந்து கலகமடக்கும் பொலிசார் தண்ணீர் வீசும் பவுசர் உட்பட நூற்றுக்கனக்கான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை திருகோணமலையி இருந்தும் அம்பாறையில் இருந்து ஆர்பாட்டத்திற்கு பஸ்வண்டிகளில் வந்தவர்களை வாகரை மற்றும் கல்லாறு பகுதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் அந்த பஸ்வண்டிகளை நிறுத்தி பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் காலை 10 மணிக்கு கல்லடி செபஸ்தியான் தேவாலயத்தில் கெட்டும் மழையில் காணாமல் போன உறவுகள் நா.உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டு மாநகர முன்னால முதல்வர் ரி. சரவணபவான், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடகிழக்கு தலைவர் வேலன் சுவாமி , வடகிழக்கு முன்னேற்ற சங்க தலைவர் த.லவகுமார் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்; ஒன்றுதிரண்டனர்.
அங்கு ஒள்று திரண்ட மக்கள் அங்கிருந்து காந்தி பூங்காவரையில் ஆர்பாட்டமாக செல்ல பொலிசார் தடைவிதித்ததையடுத்து தேவாலயத்திற்கு முன்னால் வீதியில் கறுப்பு கொடி ஏந்தியவாறு காணாமல் போன உறவுகளின் திரு உருவபடங்கள் ஏந்தியவாறு தலையில் கறுப்பு துண்டு கட்டியவாறு தமிழர்களின் நிலத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுமாறும் சுயநிர்ணயத்துடன் வாழ வழி செய், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்.
வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து, பெரும்பான்மை இனத்துக்கு சுதந்திர நாள் எங்களுக்கு கரிநாள் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.
இதனையடுத்து கல்லடி பாலத்தில் இருந்து அரசடி வரையிலான பிரதான வீதி மூடப்பட்டதையடுத்து மட்டக்களப்பிற்கு உள்நுழையும் மற்றம் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி செல்லும் வாகனங்கள் வேறு வீதிகளால் பயணித்ததுடன் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் ஆர்பாட்டம் பகல் 12 மணிவரை இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.