ஒன்டாரியோவின் ஒரு கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்
ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே கட்டணம் பல பயணங்கள் என்னும் திட்டத்தை ஒன்றாரியோ மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அவர் இந்த அறிவிப்பைச் செய்யும் போது மாகாண முதல்வர் டக்போர்ட் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விஜேய் தணிகாசலம் அவர்களின் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில். ஒன்றாரியோவின் ‘ஒரே கட்டணம்-பல பயணங்கள்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் பல நகரங்களில் உள்ளவர்கள் பொதுப் போக்குவரத்தை எளிதாகவும் மலிவான கட்டணத்திலும் மேற்கொள்வதை எங்கள் அரசாங்கம் எளிதாக்குகிறது என்பதை அறிவிப்பதற்காக நான் எமது மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களுடன் ஒன்றாக இணைந்திருந்தேன் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகின்றேன்.
எதிர்வரும் பெப்ரவரி 26 முதல், GO ட்ரான்சிட் உட்பட, TTC மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் இயங்கிவரும் பங்கேற்கும் ட்ரான்ஸிட் ஏஜென்சிகளுக்கு இடையே இலவசமாகப் பரிமாற்றம் செய்யும் பயணிகள் ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நீங்கள் வேலைக்குச் சென்றாலும், பாடசாலைகளுக்குச் சென்றாலும் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றாலும், நாங்கள் ஒரு போக்குவரத்து அமைப்பிலிருந்து மற்றொரு போக்குவரத்து அமைப்பிற்கு மாற்றுவது மிகவும் எளிமையானது, வசதியானது மற்றும் மலிவானது என்பதை அறியத்தருகின்றோம். வாரத்தில் ஐந்து நாட்கள் பயணம் செய்யும் வயது வந்தவருக்கு, இது சராசரியாக ஆண்டுக்கு $1,600 டாலர்களை சேமிக்க உதவியாக இருக்கும்” என்றும் அறிவித்துள்ளார்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்
மேலதிக விபரங்களுக்கு விஜேய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்தை அடைய vijay.thanigasalam@pc.ola.org அல்லது416-283-8448. ஆகியவற்றை பயன்படுத்துங்கள்