மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
டில்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.