2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் நாட்டிற்குவருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 98,455 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரிமாதத்தில் வந்த 2,08,253 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், இந்தஆண்டு இதுவரை 3,06,708 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்தசுற்றுலா பயணிகளில் ரஷ்யா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளமைகுறிப்பிடத்தக்கது.