பாட்டனாரை போன்று அமைச்சுப் பதவியை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.
16-02-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கயேந்திர குமார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது தடுப்பதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான் பலமுறை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன் வைத்திருக்கிறேன் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன் சிலர் அதனை மறுக்கின்றனர் என்றார்.
இதன் போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள் உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள் என்றார்.
இதன் போது பதில் அளித்த அமைச்சர் இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது இராஜதந்திர ரீதியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும் என்றார்.
இதன்போது பதிலளித்த கஜேந்திரகுமார் உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள் என்றார்.
இதன் போது பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சனை தீரப் போவதகத் எனக்கு தெரியவில்லை உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன் என்றார்.