பிரபல கன்னட நடிகரான யாஷ், தன் மனைவிக்கு சிறு கடை ஒன்றில் சாக்லேட் வாங்கிக் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், நடிகர் யாஷ். இவர் ‘ராக்கிங் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என விமரசன ரீதியாக வெற்றிபெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்தது. 1000 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது. இந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் புரொடக்ஷன் மற்றும் மாஸ்டர் மின்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ’டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
![பெட்டிக்கடையில் தன் மனைவிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த நடிகர் யாஷ்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/02/14.jpg)