17-02-2024 சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற போது பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர்
கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் காணிகள் சுபீகரிக்கப்படாது என்ற தீர்மானம் எட்டப்பட்ட பலாலி பகுதியில் உள்ள 500 ஏக்கர் தனியார் காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தை அனுப்பியது யார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதில் யாரும் கூறாத நிலையில் நில அளவைத் திணைகள் அதிகாரிகள் இங்கு இருக்கிறீர்களா என சுமந்திரன் கேட்க நில அளவைத் திணைகள் அதிகாரி ஒருவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
குறித்த காணிகளை அளவிடு செய்து தருமாறு தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்திலிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றதால் அளப்பதற்காக சென்றோம் மக்கள் அங்கு தடுத்தார்கள் என்றார்.
இதன் போது குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் குறித்த விவகாரம் தொடர்பில் கூறுமாறு கூறிய நிலையில் முன்னாள் பிரதேச செயலாளர் விளக்கத்தை முன் வைத்தார்.
குறித்த பகுதியில் உள்ள காணிகளில் விமான நிலையத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவையை தவிர்த்து எஞ்சிய பகுதிகளை கணிப்பதன் மூலம் எதிர்வரும் அபிவிருத்தி திட்டங்களை இலகுபடுத்த எஞ்சிய காணிகளை அளவீடு செய்ய கொழும்பிலிருந்து அறிவுறுத்தல் கிடைத்ததாகக் கூறினார்.
அவர் இவ்வாறு பதில் வழங்கிய நிலையில் யாழ்ப்பாண அரச அதிபரை நோக்கி பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் தீர்மானம் எடுக்கப்பட்ட பகுதியை ஏன் அளக்கச் சென்றார்கள் என கேள்வி எழுப்பினர்.
இதன்போது பதில் அளித்த யாழ்ப்பாண அரச அதிபர் குறித்த பகுதியில் காணியை எடுப்பதற்கான எந்த வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.