(ஊடகன் )
ஈழத் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக தென்னிலங்கையின் சிங்கள பௌத்த அரசுகளின் அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பி. பின்னர் சாத்வீதிகப் போராட்டங்களை நடத்தி அவற்றிலும் எதனையும் சாதிக்க இயலாது இறுதியில் ஆயுதப்போராட்டத்தையும் அதற்கு சமாந்தரமாக அரசியல் போராட்டங்களையும் நடத்தி அதில் வெற்றியின் உச்சத்தை அடைந்து விட்டது போன்று ஒரு இடத்தை அடைந்தனர்.
ஆனால் உலக நாடுகளின் தென்னாசியாவில் ஒரு மக்கள் புரட்சி வென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்பட்டதால் தங்களுக்குள் ஆதிக்கப்போட்டிகளில் மூழ்கி போட்டியிட்டுக்கொண்டாலும். வீடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அவர்களது முப்படை கொண்ட சிற்றரசு ஒன்றையும் அழித்தார். அதோடு மாத்திரமல்லாது அந்த வன்னி மண்ணில் நிரந்தரமாக வாழ்ந்து விடுதலைப் புலிகளோடு ஒன்றிய வண்ணம் தங்கள் சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த சுமார் 1 இலட்சம் அப்பாவி மக்களையும் கொன்றழித்தார்கள்.
‘இறுதி யுத்தம்’ என்ற பெயரோடு ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட 2009ம் ஆண்டிலிருந்தும் இன்று வரை எமது தமிழ் மக்களின் அனைத்து கூறுகளையும் சிதைக்கும் வகையில் சர்வதேசச் சக்கிகளும் இலங்கையில் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றவர்களும் அவர்களோடு இணைந்து தமிழ்த் தலைவர்கள் உட்பட அனைவரும் எவ்வித இலட்சியமும் இல்லாத சுயநல அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி சர்வதேச ரீதியில் நேற்று இன்று நாளை என்ன நடைபெற்றது என்ன நடக்கவுள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.!
இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டம் அமெரிக்கா, இந்தியா வல்லாதிக்க போட்டியில் பின்னப்பட்டு சிக்குண்டு சின்னா பின்னாமாகப்பட்டது போல சிங்கள பேரினவாதம் பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரோபாய மூலம் தமிழர்களின் ஆயுத போராட்டதை எவ்வாறு இல்லாது ஒழித்ததே அதே பாணியில் விடுதலைப் புலிகாளால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவை ஏற்படுத்தியதுடன் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டு எஞ்சியுள்ள தமிழரசு கட்சியை சின்னா பின்னமாக்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இரா. சாணக்கியன் களம் இறக்கப்பட்டு அரங்கேற்றி அதன் ஊடாக சிங்கள பேரினவாம் வெற்றி கண்டுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது
தமிழர்களின் உரிமை போராட்டத்துக்காக தந்தை செல்வா ஆரம்பித்த தமிழரசு கட்சி பின்னாளில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியாக தேற்றம் பெற்று செயற்பட்டு தமிழர் உரிமைக்காக அகிம்சை ரீதியாக போராட்டங்களை நடாத்தி தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அகிம்சை போராட்டம் சரிவராது தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்லா தெரிவித்த கருத்தையடுத்து பொங்கி எழுந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் குதித்தனர் இதனை அறிந்த இந்தியா பிரதமர் இந்திரா காந்தி தனது நாட்டின் தேச நலனுக்காக தேசிய புலனாய்வான றோவின் ஆதரவுடன் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து பல இயக்கங்கள் உருவாகி அவர்களுக்கு ஆயுத பயிற்சி தொடக்கம் ஆயுதங்களையும் வழங்கி சிங்கள தேசத்திற்கு எதிராக போராடவைத்தது.
இந்த இயக்கங்களை றோவின் மூத்த அதிகாரியாக அப்போது சென்னையில் இருந்து செயற்பட்ட உன்னிகிருஷ;ணன் தலைமையில் கண்காணித்து வந்தனார் இதன் போது அந்த மூத்த அதிகாரி அமெரிக்காவுக்கும் புலனாய்வு வேலைகளை இரகசியமாக செய்து வந்துள்ளார். இதன் அடிப்பiடையில் றோவின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த ரெலோவை இல்லாது ஒழிப்பதற்கு அமெரிக்காவின் திட்டத்தை றோவின் மூத்த அதிகரி ஊடாக கச்சிதமாக செயற்படுத்தி வெற்றிகண்டது
அதாவது ரொலோவிற்குள் முரண்பாட்டை ஏற்படுத்தி அவர்களை தாஸ்குறுப் பொபிகுறுப் என இரண்டாக உடைந்த நிலையில் அமெரிக்கா சார்பு நிலை விடுதலைப் புலிகளுக்கு றோவின் அந்த மூத்த அதிகாரி ஊடாக ரொலே சிறிசபாரட்ணத்தை சுட்டுகொன்று ரெலோவை முற்றாக அழிக்குமாறு உத்தரவுக்கமைய புலிகள் அதனை செய்தனர்.
அமெரிக்காவிற்காக செயற்பட்ட அந்த றோவின் மூத்த அதிகாரியை ரஜீவ் காந்தி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்தனர். பின்னர் நரசிம்மராவ் பிரதமராக வந்ததும் அவர் வெளியில் வந்தார்.
இதன் பின்னர் அமெரிக்கா சார்பான விடுதலை புலிகளை இந்தியா முற்றாக ஒழிப்பதற்கான திட்டமிட்ட நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல் இடம்பெற்றது
இவ்வாறான நிலையில் ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததையடுத்து இந்தியா மிக கவனமாக சந்தர்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது அப்போது 2002 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் அரசாங்கத்துடன் புலிகள் யுத்தம் ஆரம்பித்ததையடுத்து இந்திய பிரதமரான சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை முற்றாக அழிக்க அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை சோனியா காந்தி முற்றாக அழித்து தனது பழியை தீர்த்து கொண்டார்
இவ்வாறான நிலையில் தமிழர்களின் உரிமை போராட்டத்துக்காக ஆரம்பித்து பின்னர் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் சோர்ந்து இயங்கிவந்த ஆயுத குழுக்கள் உட்பட அரசியல் கட்சிகள் உட்பட அனைவரையும் புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர்.
இதனடிப்படையில் இந்தியா தேசிய புலனாய்வின் தேசிய பாதுகாப்பு கொள்கைகளில் ஒன்றாக புலிகள் சார்புடைய எந்த கட்சிகளோ அமைப்புக்களோ இலங்கையிலே வெளிநாடுகளிலே இல்லாமல் செய்யும் வேலைத்திட்டங்களை செய்து வந்த நிலையில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கண்வைத்தது
இதற்கு முதலில் தமிழ் கூட்டமைப்பை பிளவுபடுத்தவேண்டும் அதற்கு இந்திய சர்புடைய சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஊடாக தமிழ் தசிய கூட்டமைப்புக்கு பிளவை ஏற்படுத்தி தனது சார்புடையவர்களை கொண்டு புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது வெற்றி கண்டது.
அதேபோல அமெரிக்கா சார்புடைய கஜேந்திரகுமார் அணியினரையும் சுமந்திரன் ஆகியோரை அமெரிக்கா பயன்படுத்தியது இவ்வாறு இந்தியாவும் அமெரிக்காவும் தனது பூகோல நலன்களுக்காக தமிழர்களின் தலைமைகளை தமது நலன்களுக்கு ஏற்றால் போல ஆட வைத்தனர் அவர்களும் அவர்களுக்காக நடனம் ஆடினர்.
இருந்தபோதும் அமெரிக்கா சார்புடைய தமிழ் அரசியல் கட்சிகளை தனது பக்கம் மாறாதா கட்சிகளை உடைப்பது என்ற செயற்பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த போது இந்திய சார்புடைய சிறீதரன் தமிழரசு கட்சியின் தலைவராக வந்ததையடுத்து இந்தியா பெருமூச்சு விட்ட நிலையில் அமெரிக்கா சிறிதரனை தனது வலையில் சிக்க வைப்பதற்காக எம். சுமந்திரன் சாணக்கியன் மூலம் சிறிதரனுக்கு நெருக்கடியை கொடுப்பதற்காக இந்த நீதிமன்றத்தில் தமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு தொடர வைத்தனர்.
இந்த சதிக்கு சிங்கள பேரினவாதிகளின் செல்லப் பிள்ளையாக மொட்டு கட்சியில் இருந்த சுது மல்லி என்றழைக்கப்படும் சாணக்கியனை சுமந்தரணின் ஆதரவுடன் தமிழரசு கட்சிக்கு உள் நுழையவைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கி தனது சார்பு நிலையில் சாணக்கியன் தொடர்ந்து வைத்துக் கொண்டார்.
இதேவேளை சிங்கள பேரினவாத மொட்டு கட்சி மகிந்த ராஜபக்ஸ சுது மல்லிக்கு கொடுக்கப்பட்டவேலையை அவர் கட்சிதமாக காய்நகர்தினார் அதாவது சிங்களவர்களுக்கு எதிரானவன் என காண்பித்து தனக்கு மட்டும் தான் மூன்று மொழி தெரியும் என அநாகரிகமாக கத்தி தமிழர்களுக்கு உணர்ச்சி ஏற்றி அரசுக்கு எதிராக வீதி மறியல் போராட்டங்களை ஏற்பாடு செய்து தமிழர்களின் கதாநாயகன்; தான்தான் என சித்தரித்து வேடம் போட்டுகாட்டிவந்தார்.
அரசுக்கு எதிராக நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டம், மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் உட்பட பல போரட்டங்களை தலைமை தாங்கி நடாத்துவது போல மக்கள் மத்தியில் காண்பித்து அங்கு பொலிசாருடன் முறுகுவது போல பொலிசாருடன் சண்டையிட்டு அங்கிருந்து இவர் எவ்வாறு நடந்து கொண்டு தான் மாத்திரம் தப்பித்து கொண்ட சுது மல்லிக்கு சிங்கள பேரினவதிகளால் கொடுக்கப்பட்ட நாடகத்தை செவ்வன அரங்கேற்றி கொடுத்துள்ளார்.
இவ்வாறு இந்தியா கொண்டுவந்த 13 திருத்தசட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சி செய்துவரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்த சுரேஸ்;, சித்தார்தன், செல்வம் அடைக்கலநாதன் அணியினரை அதற்கு எதிராக செயற்படுவதற்காக அமெரிக்கா அமெரிக்காவிலுள்ள புலம் பெயர்ந்த அமைப்பு ஒன்றின் ஊடாக ஆளுக்கு 2 பில்லியன் பணம் அண்மையில் கைமாறப்பட்டுள்ளது
இந்த தரகு வேலையை மகிந்தவின் செல்லப்பிள்ளையான ஒரு பிரல்யமான தமிழ் ஊடகவியலாளராக இருந்து செயற்பட்டவர் மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் இவர் மூலம் தான் அமெரிக்கா அரக்கல போராட்டத்திற்கு 350 பில்லியன் ரூபாவை சஜித்துக்கு வாங்கு கொடுக்கப்பட்டது
இந்த தகவல் மகிந்தவுக்கு தெரியவந்தால் தனக்கு நெருக்கடி ஏற்படும் என மகிந்தவிடம் அவர் சஜித்துக்கு பணம் வாங்கி கொடுத்ததாக தெரிவித்ததையடுத்து கோடபாய 400 பில்லியன் வாங்கி தந்தால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜணாமா செய்வதாக தெரிவித்து அதனை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி கொடுத்து அவர் இராஜணாமா செய்யப்பட்டது இவைகள் அனைத்தும் அன்டகிறவுன் டீல் சந்திக்குவராத இராஜ இரகசியங்கள்
இவ்வாறு தமிழர்களின் உரிமை போரட்டத்தை வைத்து தமிழ் தலைமைகள் வல்லரசு நாடுகளின் விஜபி இன்போமர்களாக செயற்பட்டு வருகின்றனரே தவிர உண்மையில் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக செயற்படவிலை ஆனால் இதனை கேட்டால் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு என்கின்றனர்
அப்படி என்ன சந்திப்பு இவர்கள் தமிழர்களின் கல்வி பொருளாதாரம் வாழ்வாதாரம் நிலப் பிரச்சனை இனழிப்பு தொடர்பாக எந்த திட்டதை ஆவணங்களுடன் முன்வைத்துள்ளனர் இவர்கள் தமது நாடாளுமன்ற பதவி காலத்தில் அவர்களது மாவட்டத்திலுள்ள மக்களின் கல்வி பொருளாதாரம் வாழ்வாதாரம் மேம்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளனர் என்றால் ஒன்றுமே இல்லை ஏன் என்றால் இவர்கள் காலையில் எழுந்ததும் தமிழர்களை ஊர்ச்சி பொங்க வைத்திருக்க வேண்டும் என்பற்காக சும்மா வாயால் வந்ததை எல்லாம் ஊடகங்களன் முன்னால் பேசினால் சரி என மக்களை ஏமாற்றும் நடவடிக்கையினை மட்டுமே செய்து வருகின்றனர்
அதேவேளை தேர்தல் காலம் வந்ததும் தமிழ் தலைமைகள் ஒன்றினைய வேண்டும் என தமிழ் கட்சிகள் கோஷமிட்டு அறைகூவல் விடுப்பதும் ஆளுக்கு ஒரு கூட்டு என கூட்டுச் சேர்வதும் பின்னர் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்தி கூட்டில் இருந்து வெளியேறுவதும் தான் கடந்த 14 வருடங்களாக செய்துவருகின்றனர்.
தமிழர் நலனுக்காக தான் செயற்படுவதாக தெரிவித்து வரும் இந்த தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கில் 30 கட்சிகளுக்கு மேல் பதிவு செய்து கொண்டுள்ளனனர் இவர்கள் அனைவரும்;; தமது கட்சி பதவிகளை விட்டெறிந்துவிட்டு ஏன் ஒரு கட்சிக்குள் சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைக்கா செயற்பட முடியாது என்ற கேள்வி எழுகின்றது
ஏன் என்றால் அவர்களுக்கு தேவை பதவி பணம் மட்டும் தான் இவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை தமது கதிரைக்கும் தலைமையை காப்பாற்ற மட்டுமே பேர்தும் என்ற எண்ணக்கருவில் செயற்பட்டுவருகின்றனர்
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமை போராட்டத்திற்காக என்னற்ற உயிர்தியாகங்கள் சொத்துக்கள் உற்றார் உறவினர் வீடு வாசல்கள் கைகால்கள் இழந்து நிர்கதியாக இருக்கின்ற மக்களின் வாழ்வுக்கு செய்ய வேண்டியவற்றை செயற்படுத்தி கொண்டு உரிமை போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை இராஜதந்திரத்தை கற்றுக்கொண்டு பூலோக அரசியலுக்கு எற்ப எமது தாயக விடுதலைக்காக இராஜதந்திர ரீதியாக செயற்படவேண்டும் அதற்கான திட்டம் இடப்பட்டு முதலில் அத்திவாரம் போபடவேண்டும் இதனை விடுத்து சுயநல அரசியலுக்காக தமிழ் தலைமைகள் தமிழ் மக்களைவிற்று பிழைப்பு நடாத்துவதை நிறுத்தி இதய பூர்வமாக தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்
எனவே இந்தியா அமெரிக்கா சீனா வல்லாதிக்க நாடுகளிடனும் சிங்கள பேரினவாதிகளின் சதிவலையில் பின்னப்பட்டுள்ள தமிழர் உரிமை போராட்டத்தையும் தமிழ் மக்களையும் உடைக்க வல்ல ஒற்றுமையுடன் கூடிய அறிவு சார்ந்து போராட்டங்களின் அவசியம் எமது ஈழத்தமிழர்களின் முன்னால் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்