பு.கஜிந்தன்
64 சக்திப்பீடங்களில் ஒன்றான வரலாற்று ச்சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் 20-02-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மற்றும் எனைய பாரிவார தெய்வங் களுக்கு விஷேட அபிஷேக ஆராத ணைகள் இடம்பெற்று உள்வீதியுடாக சிம்மவாகனத்தில் வீற்று அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு மண்டாபிலாஷக உற்சவ அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.
மண்டலாபிஷேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமை யிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்
20.01.2024 அன்று 09.38 மணிமுதல் 11.20 மணிவரையான சுப வேளையில் , 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.