திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள உலக தாய் மொழி தின (பிப் 21) வாழ்த்துச் செய்தி வருமாறு:-
“அறமாக, அறிவாக, வாழ்வியல் நெறியாக, அனைத்துயிர்களுக்குமான பன்மைத்துவம் பொருந்திய சூழலியல் கருத்தாக, உலகம் வியக்கும் செம்மொழியாக திகழும் நம் தாய்மொழி தமிழை என்றும் வணங்கிடுவோம்.
புதுயுக சிந்தனைகள் வளர்த்து, நம் தாய்த்தமிழ் மொழி செழிக்க பணி செய்திடுவோம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.