(மன்னார் நிருபர்)
(22-02-2024)
இராணுவத்தின் 542 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை (21) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மாணவர்களின் குழு நடன போட்டிகள் இடம் பெற்றது.
குறித்த போட்டி நிகழ்வில் விருந்தினர்களாக இராணுவத்தின் 54 வது படைப்பிரிவு கட்டளை தளபதி கே.எம்.பி.எஸ்.வி.குலதுங்க,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணகேஸ்வரன்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நடனம் மேடையேற்றப்பட்டது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை குழு நடன போட்டியாளர்களுக்கு விருந்தினர் களினால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.