அரச சேவையில் வினைத்திறன் இன்மை குறித்து கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும் என பேராதனை பலகலைக் கழக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(கனகராசா சரவணன் )
இலங்கையில் அரச உத்தியோகத்தர்களின் 49 வீதமான தொலைபேசி எண்கள், அதாவது அரைவாசி எண்கள் செயல்படாத எண்கள் என் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் பிரிவின் கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286, அதாவது 49 வீதமானது செயலற்ற எண்கள் எனவும் தொலைபேசி எண்களில் 22 வீதம் செயலில் உள்ளது ஆனால் பதிலளிக்கவில்லை எனவும் ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, அழைப்புகளுக்கு பதிலளிக்கும் சதவீதம் 29 வீதமாகும்.
மேலும், 98 உள்ளூhராட்சி மன்றங்கள், 23 மாநகர சபைகள் மற்றும் 36 நகர சபைகளின் தொலைபேசி இலக்கங்கள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அரச சேவையில் தற்போதுள்ள வினைத்திறன் இன்மை குறித்து கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும் என பேராதனை பலகலைக் கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.