ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் கோட் என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் ‘படப்பிடிப்பு’ பலகட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான படப்பிடிப்பு இடத்தை தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா படப்பிடிப்பு தொடர்பான இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.