(கனகராசா சரவணன்)
சியம்பலாண்டுவ புத்தமவில் இருந்து மொனராகலை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டி ஒன்று 29-02-2024 வியாழக்கிழமை காலை 7.10 மணியளலில் சியம்பலாண்டுவ கொடயான பிரதேசத்தில் வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவதினமன்று காலை மொனராகலை நோக்கி பிரயாணித்த குறித்த பஸ்வண்டியில் சுமார் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேர் பிராணித்துள்ள நிலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக சியம்பலாண்டுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.