பெங்களூரில் ராமேஸ்வரம் கபே பிரபலமான உணவகம். இதன் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கிளையில் பிற்பகல் திடீரென மர்ம பொருள் வெடித்தது. இதில் 3 உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர். ராமேஸ்வரம் கபேயில் வெடித்தது என்ன பொருள் என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக ஒயிட் பீல்டு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமேஸ்வரம் கபேயில் சிலிண்டர் வெடித்ததாக தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
![பெங்களூர் ராமேஸ்வரம் கபேயில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/03/Bengalurus-rameswaram-marma-poural-vedupu-4-injured.jpg)