பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைப்’. திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தின் புதிய பதிவேற்றம் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘தக் லைப்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.