நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது. மீண்டும் அதே தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.