பு.கஜிந்தன்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா இன்று(7) இரவு இடம்பெற்றது.
15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான இன்று மாலை 7.00 மணியளவில் சப்பைரதத் திருவிழா நடைபெற்றது.
நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப்பெருமான பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக சப்றத்தில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை மகோற்சவத்தில் தேர்த்திருவிழா நாளை (8) காலை நடைறெவுள்ளதுடன், இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.