கனடா – ஸ்காபுறோவில் நாஸ்டின் வீதியில் அமைந்துள்ள ‘மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஏற்பாட்டில் பங்காரு அடிகளாரின் 84வது பிறந்த தினம் கடந்த 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் ஆலயத்தில் விசேட அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றோடு ஆரம்பமாகிய தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
மன்றத்தின் ஸ்தாபகர் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் உபயகாரராக திரு. திருமதி உமாகாந்த்-விஜி தம்பதியினர் விளங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் மன்றத்தின் முக்கிய ‘சக்தி’களில் ஒருவரான கந்தையா யோகநாதன் ஆகியோர் பங்காரு அடிகளாரின் சிறப்புக்களையும் அவர் ஆற்றிய சமூக மற்றும் சமயத் தொண்டுகளைகளையும் தொடர்ச்சியாக அந்த மேல்மருவத்தூர் ஆலயம் அடைந்த வளர்ச்சி மற்றும் ஆற்றிய சேவைகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்கள்.
அன்றை தினம் ‘சக்தி நர்ததனாலயா’ நடனப் பயிற்சி நிலையத்தின் ஆசிரியை திருமதி ஜனனி ரவிசங்கரின் மாணவி செல்வி தியானா ரவிசங்கரின் பரதநாட்டியம் இடம்பெற்றது. நடனச் செல்வியை அனைவரும் பாராட்டினார்கள்.
தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த ஆன்மீகத் தொடண்டரும் வீடு விற்பனை முகவருமான பாஸ்கரன் சின்னத்துரை அவர்களின் பிரசன்னத்தோடு அடிகளாருக்குரிய பிறந்த நாள் ‘கேக்’ வெட்டப்பட்டு பின்னர் ஸ்தாபகர் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் சகிதம் பிறந்த நாள் கொண்டாடப்பெற்றது.
தொடர்ந்து பாஸ்கரன் சின்னத்துரை அவர்கள் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்களுக்கு ‘கைலாசா இந்து தேசத்தின் வரலாறு மற்றும் நிர்வாகம் ஆகிய விபரங்கள் அடங்கிய ஆங்கில நூல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
அன்றைய விழாவை சிறப்புற நடத்த உதவிய அனைத்து தொண்டர்கள் மற்றும் ‘சக்தி’கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பெற்று பிரசாதம் வழங்கப்பெற்றது.
சத்தியன்