(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) பகல் 12 தணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான இன்று பகல் காணியை துப்பரவு செய்து அதன்குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடப்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.