நினைவஞ்சலி நிகழ்வில் சமய. சமூகச் செயற்பாட்டாளர் சோம. சச்சிதானந்தன் புகழாரம்
யாழ்ப்பணம் ஊர்காவற்றுயை பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவருமான முன்னாள் வர்த்தகரும் அமரருமான சண்முகம் தியாகராஜா மனிதநேயமிக்க ஒருவராக எம் மத்தியில் விளங்கினார். அத்துடன் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இங்குள்ள சமய மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வது மற்றும் தங்கள் ஆதரவை வழங்குவது போன்ற விடயங்களில் முன் நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமரத்துவம் அடைந்த இலங்கை வர்த்தகர் சண்முகம் தியாகராஜா அவர்கள் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு மட்டுமல்லாது. ஊரவர்கள் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என அனைத்து அன்பர்களையும் மரியாதையோடு வரவேற்று அவர்களை உபசரிக்கும் பண்பு கொண்டவர். அத்துடன் இவர் சார்ந்த உறவுகள் மீது அன்பு காட்டி அக்கறையோடு அவர்கள் மீது கவனம் செலுத்தும் பண்மையும் தன்னோடு கொண்டவராக விளங்கினார்’
இவ்வாறு கடந்த 02-03-2024 சனிக்கிழமையன்று கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற அமரர் சண்முகம் தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய சமய. சமூகச் செயற்பாட்டாளர் சோம. சச்சிதானந்தன் புகழாரம் சூட்டினார்.
அங்கு இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்- கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு செல்லத்துரை கிருஸ்ணகோபால் . ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் நினைவு உரைகளை ஆற்றினார்கள்.
மேற்படி நிகழ்வை அமரரது குடும்ப உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.-
சத்தியன்