92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலியான 67 வயதுடைய எலினா ஜுகோவாவை திருமணம் செய்ய இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (92). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர். ரூபர்ட் முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையேயான திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பங்களாவில் நிகழ்த்த உள்ளதாக ரூபர்ட் தெரிவித்துள்ளார். இது இவருடைய 5 வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.