கனடாவின் ஒட்டாவா தலைநகரில். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்களை கொலை செய்த இலங்கையிலிருந்து வந்திருந்த சர்வதேச மாணவன்
கனடாவின் ஒட்டாவா தலை நகரில் 06-03-2024 புதன்கிழமை அன்று இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் உட்பட ஆறாம் நபரான ஆண் ஒருவரும் 19 வயதான இலங்கை சர்வதேச மாணவர் Febrio De-Zoysa என்பவரால் கொலை செய்யப்பட்டார்கள் என்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் தொடர்பாக அந்’த இளம் கொலையாளைி கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் பிரிவு அறிவித்துளளது.
இந்த துயரம் தரும் சம்பவத்தில் இளம் தாயின் கணவரும் கொல;லப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையுமான தனுஸ்கா விக்ரமசிங்க என்பவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பயங்கரம் நிறைந்த கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 19வயது சர்வதேச மாணவனினால் கொல்லப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு;-
35 வயதான தாய் தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யகே.
ஏழு வயது மகன் இனுகா விக்கிரமசிங்க.
நான்கு வயது மகள் அஷ்வினி விக்ரமசிங்க.
இரண்டு வயது மகள் ரினியானா விக்கிரமசிங்க.
இரண்டு மாத பெண் குழந்தை கெல்லி விக்கிரமசிங்க.
மேலும் 40 வயதான அமரகோன்முபியான்சேலா ஜீ காமினி அமரகோன் என்னும் இலங்கையரும் கொல்லப்பட்டார் என்றும் அவருக்கும் கொலைகளுக்குள்ளான குடும்பத்திற்கும் என்ன உறவு என்பதை அறிய முடியவில்லை என்றும் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
ஒட்டாவா பொலிஸ் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் புதன்கிழமையன்று 6ம் திகதி
911 க்கு அழைப்புகள் இரவு மார் 10:50 க்கு வரத் தொடங்கியதாகவும் இரண்டு பிரதான பாடசாலைகளுக்கு அருகில் அமைந்திருந்த மேற்படி குடியிருப்பு பகுதி.க்கு பொலிசாரும் அவரச உதவியாளர்களும் சென்றபோது. ஆறு பேர் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர் மற்றும் அங்கு காணப்பட்ட காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் CBC தொலைக்காட்சி செய்தியாளரிடம் தகவல் தெரிவிக்கையில் , உயிரிழந்தவர்களில் இலங்கைப் பெண் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் உள்ளடங்குவதாகவும், தந்தை இலங்கையர் உயிர் பிழைத்த போதிலும் மோசமான காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அறுவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் கனடாவிலும் இலங்கையிலும் அதிர்ச்சியினால் உறவினர்களும் நண்பர்களும் உறைந்து போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.