யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் “சிவ தட்சிணாமூர்த்தி” பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 லிங்கங்களுக்கு அடியவர்கள் நீரூற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியவண்ணமுள்ளனர்.