(கனகராசா சரவணன் )
வவுனியா வெடுக்குநாறிமலை ஆலையத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிசாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பொது மக்கள் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் பொலிசாரின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு காந்தி பூங்காவிற்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மனித உரிடை செயற்பாட்டாளர்கள், இந்து கிறிஸ்தவ மதகுருமார் கட்சி ஆதரவாளர்கள் உட்பட நூhற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
இதனையடுத்து தடுக்காதே தடுக்காதே சிவ வழிபாட்டை தடுக்காதே, சிவராத்திரி நாளில் சிங்கள அடக்குமுறை, மனிதத்தை மிதிக்காதே, மத உரிமையை தடுக்காதே, தமிழ் அமைச்சர்களே வெடுக்குநாறி, மையத்தமடு நிலங்களைவ விற்று விட்டீர்களா?, சிவபூசைக்குள் காக்கி கும்பல்கள் ஏன்?, பொலிசாரின் அடக்கு முறையை சர்வதேசமே விசாரி போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கேஷங்கள் எழுப்பியவாறு அரசையும் பொலிசாரையும் கண்டித்து அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்;வலமாக நகர் மணிக்கூட்டு கோபுர வீதி சுற்றுவட்டத்தை சுற்றி மீண்டும் காந்தி பூங்காவை சென்று ஆர்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.