நடராசா லோகதயாளன்
வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியுள் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் கண்டணப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று மாலை 4 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மகா சிவராத்திரி பூசையின் போது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழிபட சென்றவர்கள் மீது பொலிசாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.